ஆகஸ்ட் 15ஆம் தேதி உறுதியாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

 நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை தமிழக வீட்டு வசதித் துறை மற்றும் ஆயத்த தீர்வை அமைச்சர் சு. முத்துசாமி ஆய்வு

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உறுதியாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் தமிழக வீட்டு வசதி துறை மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி ஆய்வு பணி மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு. முத்துசாமி கூறிய போது...



கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் ஓரிரு நாட்களில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளனவாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறதுஆகஸ்ட் 15 தண்ணீர் திறப்பதற்கு முன் அல்லது தண்ணீர் இந்த இடம் வந்து சேர்வதற்குள் வாய்க்கால், மற்றும்  மதகு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.அதிகாரிகள் இரவு, பகலாக தண்ணீர் திறப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர்நிச்சயமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்



கடுமையான மழை இருந்தால் சூழ்நிலைகளை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்இன்றைய சூழ்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் கண்டிப்பாக திறக்கப்படும்தமிழக முதல்வர் கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளார்மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சீரமைப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளையும் மிகவும் நெருக்கமாக ஆய்வு செய்யப்பட்டு  அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்...



ஆய்வின்போது ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா,ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம்,நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

செய்தியாளர்.எம்.மாரிச்சாமி
9080602161
Previous Post Next Post