சேலம் தாரமங்கலம் வேதாத்திரி மகரிஷி 113 வது ஜெயந்தி விழா முன்னிட்டு 2225 பள்ளி மாணவ மாணவிகளின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.


வேதாத்திரி மகரிஷி 113 வது ஜெயந்தி விழாவை கொண்டாடும் விதமாக 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சேலம் தாரமங்கலம் வேதாத்திரி மகரிஷி பள்ளியில் 2225 பள்ளி மாணவ மாணவிகள் பவளதானூர் பள்ளியில் தொடங்கி தாரமங்கலம் காமராஜர் சிலை அண்ணா திடல் கலைஞர் சிலை வழியாக உடல் ஆரோக்கியம் யோகா செய்வதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பதாதைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக வந்து கைலாசநாதர் ஆலயத்தின் முன்பு 75 ஆசனங்களை 20 நிமிடங்களில் செய்து  உலக சாதனை செய்தனர்.


இந்நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அறிவித்தார்.நோபல் உலக சாதனை நடுவர் சிட்டுக்கலா அங்கீகரித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் அரசு பொது மருத்துவமனை டாக்டர் திருநாவுக்கரசு, பள்ளியின் தலைவர் பூபதி ராஜா, துணைத் தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சுபலதா மற்றும் பள்ளியின் முதல்வர் ஜெயா எலிசபத் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 


Previous Post Next Post