திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அனைப்பாளையம்யம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற பர்கூரை சேர்ந்த பாண்டியன்(22) விஜய் (25) என்கிற இரண்டு பனியன் தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு
ரயில்வே இருப்பு காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருப்பூர் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியில்
திருப்பூர் -கோவை செல்லும் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் நிட்டிங் பிரிவில் வேலை பார்க்கும் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாண்டியன், விஜய் ஆகிய இருவரும் ரயில் செல்லும் போது செல்பி எடுப்பதற்காக ரயில்வே தண்டவாளம் அருகில் நின்று கொண்டு ரயில் வரும்போது செல்பி எடுக்க முற்பட்டபோது இருவர் மீதும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து
இருவரது உடல்களையும் திருப்பூர் ரயில் நிலைய இருப்பு காவல் நிலைய போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் மீது ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.