சேலம் ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க செயற்குழு கூட்டம்


சேலம் ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது.இதற்கு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட மாணவர் சங்க அமைப்பு செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட மாணவர் சங்க செயலாளர்கள் குமார், நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாணவர் சங்க மாநில செயலாளர் வக்கீல் விஜய ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில் வருகிற 25-ந் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை,எளிய மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, ஜப்பான் புத்தகம் வழங்குதல். அனைத்து பகுதிகளிலும் மரக்கன்று நடுதல்.மாவட்டம் முழுவதும் திண்ணை பிரச்சார குழு அமைத்து ஒவ்வொரு வீடு,வீடாக சென்று பொது மக்களை சந்தித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்த போது செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வருகிற 2026-ம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாணவர் சங்க மாவட்ட தலைவர்கள் மோகன்ராஜ், குப்புசாமி, தர்மராஜ், மாவட்ட நிர்வாகிகள் சூர்யா, விக்னேஷ், ஜீவா, வேல் கண்ணன், தீபக், சஞ்சய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post