பவானிசாகர் அருகே, காட்டெருமை முட்டியதில் வனக்காப்பாளர்படுகாயம்.



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. பவானிசாகர் விளாமுன்டி ரேஞ்ச், சிங்க மலை பீட் காப்புக் காடு என்ற இடத்தில், ரோந்து பணியில் இருந்த ரவிராஜ் வயது 38 என்ற வனக் காப் பாளரை, காட்டெருமை முட்டி தாக்கி யதில், இடுப்பின் மேல்  பகுதியில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து, முதலுதவி சிகிச்சை பெற்று, பின் னர்  மேல் சிகிச்சைக்காக, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

Previous Post Next Post