ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா த.மாகா. சார்பில் பொதுக்கூட்டம்..

 ஈரோடு ஜூலை:14

காமராஜர் பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 15ஆம் தேதி சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. ஈரோடு திண்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் விடியல் சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி  ஈரோடு திண்டலில்  வரும் 15ஆம் தேதி சனிக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.




காமராஜரின் எளிமை தூய்மை வெளிப்படையான நிர்வாகம் ஆட்சியின் சாதனை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடக்கிறது.பல்வேறு தலைவா்கள்  முன்னாள் எம்பிக்கள்,எம்எல்ஏக்கள் பங்கேற்று பேசுகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 25,000 பேருக்கு மேல் பங்கேற்க உள்ளனர். இந்த பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடக்க உள்ளது.கூட்டத்திற்கு விருதுநகரில் இருந்து காமராஜர் நினைவு ஜோதியும்,தஞ்சாவூரிலிருந்து மூப்பனார் நினைவு ஜோதியும் கொண்டு வரப்படுகிறது.இந்த பொதுக்கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அடித்தளமாக அமையும் மேலும் கடந்த இரண்டு மூன்று முறை நடந்த தேர்தல்களில் த.மா.க தனது வெற்றியை பதிவு செய்து கொள்ளவில்லை இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பதிவு செய்யும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமையும் தமிழகத்தில் கவர்னர் முதல்வர் இடையே அரசியல் முரண்பாடு கருத்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழக ஆளுநர் அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்காமல் மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் இவ்வாறு விடிய சேகர் கூறினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், சந்திரசேகர்,யுவராஜா மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post