நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் உப்பட்டி சேழக்குன்ணா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் ஈட்டி மரம் விழுந்தது இதனை அடுத்து கிருஷ்ணன் என்பவர் வேட்டை தடுப்பு காவலர் கலை கோவில் தகவல் கொடுத்ததின் பேரில் பிதிர்காடு வன சரகருக்கு தகவல் கொடுக்கப்பட்டு நெல்லி யாளம் வனப்பிரிவு வனவர் பெலிக்ஸ் கிராம நிர்வாக அலுவலர் அசோகன் மற்றும் யானை கண்காணிப்பு குழு குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர் இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை மேலும் குடியிருப்பு பகுதியில் அபாயகரமான மரங்கள் இருப்பின் வருவாய் துறைக்கு மற்றும் வனத்துறைக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது