சேலம் சாரதா கல்லூரி சாலையில் சேலம் ஸ்டோர்ஸ் ஜுவல்லர்ஸ் புதிய ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.77 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமும் பெருமையும் மிக்க சேலம் ஸ்ரீ சி.ரங்கநாதன் அவர்களின் சேலம் ஸ்டோர்ஸ் ஜுவல்லர்ஸ் தனது புதிய கிளையை சேலம் மாநகரில் 5 ரோடு அருகில் சாரதா கல்லூரி சாலையில் இன்று காலை பிரமாண்டமாக தொடங்கியது. ஜார்க்கண்ட் கவர்னர் ஸ்ரீ சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அருள், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழா குறித்து நிர்வாக இயக்குனர் முருகன் கூறியதாவது எங்களது புதிய ஷோரூமில் வைர நகைகள் ரம்யமான தங்க நகைகள் வெள்ளி நகைகள் கவர்ச்சிகரமான கலெக்ஷன்ஸ் என அனைத்திற்கும் தனித் தனி பிரிவுகள் இடம் பெற்று இருக்கிறது.திறப்பு விழா சலுகைகளாக ஜூலை 6 ஆம் தேதி முதல் 9 ந் தேதி வரை தங்க நகைகளின் மீது 5% சலுகையும்,வைர நகைகளுக்கு ரூ.10,000 வரை சலுகையும் வெள்ளிப் பொருட்களுக்கு செய்கூலி இல்லாமல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். மேலும் சிறப்பு சலுகையாக நகை சேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் அன்றைய பணம் செலுத்தும் நாளில் நகையின் விலை மதிப்பிலேயே வரவு வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் திறப்பு விழாவில் மாதவன், நடராஜன், யாமினி ஆகியோருடன் வாடிக்கையாளர்களும் நண்பர்களும் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்