கரூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் கரூர் மாவட்ட துணை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி, கரூர் மாநகர நல அலுவலர் மருத்துவர் லட்சிய வர்ணா அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான காமராஜர் மார்க்கெட் மற்றும் மாரியம்மன் கோயில் பகுதிகளில், சுகாதார ஆய்வாளர்கள் திரு மதிவாணன் திரு ராஜேந்திரன் மற்றும் பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் விதிமீறல்களில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு புகையிலை தடுப்பு சட்டம் 2003 இன் படி அபராதம் விதைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக கரூர் மாவட்ட தலைமை செய்தியாளர்
சுரேஷ்செல்வராஜ்...