சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அணு சக்தி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி


சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முதல் நாளை 01.08.2023 இரண்டு நாட்கள் அணுசக்தி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற உள்ள நிலையில்  ஏ.வி.எஸ் கல்லூரியும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்துகின்றனர்.நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று தொடக்க விழாவுடன் நிகழ்ச்சி தொடங்கியது.கல்லூரியின் தலைவர் க. கைலாசம், செயலாளர் கை. ராஜ விநாயகம், தாளாளர் கை. செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர்.கார்மல் மெர்சி பிரியா தலைமையுரை நிகழ்தினார்.துனை முதல்வர் ஆர்.மேகவண்ணன் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக  இந்திராகாந்தி ஆய்வு மையத்தை சார்ந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் விழிப்புணர்வு தலைவர் ஜலஜா மதன் மோகன், தமிழ்நாடு அறிவியல் சங்கம் மனோகர், முதன்மை விஞ்ஞானி மண்டல இயக்குனர் முனைவர்.லட்சுமி நரசிம்மன், தலைவாசல் ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி கே.பி‌.ஸ்ரீதேவி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணுசக்தி பற்றிய கருத்துக்களை மாணவர்களுக்கிடையே கலந்துரையாடி சிறப்புரையாற்றினார்கள்.முதல் நாள் நிகழ்வுகளாக கல்லூரியின் வ.உ.சி கருத்தரங்க அறையில் அணுக்கருச் சார்ந்த தொழில்நுட்ப சொற்பொழிவு நடைபெற்றது. பின்பு அறிவியல் சார்ந்த ஆவணத் திரைப்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது. மேலும் நேதாஜி கருத்தரங்க அறையில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி காட்டப்பட்டது. மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியம் தீட்டுதல்,சிறந்த வாசகங்கள் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.கல்லூரி வளாகத்தில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதனை பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருந்து வந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு மிகுந்த பயனடைந்தனர்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 




Previous Post Next Post