அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம்

 ஈரோடு  மொடக்குறிச்சி அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் இணைந்து  நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம்  09-07-2023 ஞாயிற்றுக்கிழமை  மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.



 இம்முகாமில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. கிருத்திகா சிவ்குமார்  கலந்து கொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டார்கள்.



சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் டாக்டர்.தினேஷ் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்) மற்றும்  டாக்டர். சனுப் குமார் செரின் சபு (பொதுநலம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்) ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள்.



 முகாமில் கலந்த கொண்டவர்களுக்கு எக்ஸ்ரே இலவசமாக எடுக்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.


 தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக பூபாலன்

Previous Post Next Post