சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் சேலம் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, அரோகியபிரபு, ரவி, சிவலிங்கம், புஷ்பராஜ், குமரகுருபரன், ரமேஷ், முத்துசாமி, கண்ணன், ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்கு சாவடி, ஜங்ஷன், வ உ சி மார்க்கெட் ,சின்ன கடைவீதி போன்ற பகுதிகள் 54 கடைகள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டன.ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் 5.800 கிலோ, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட மீன்.50.00கிலோ, பழைய கெட்டுப்போன ஆட்டிறைச்சி 17.00 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அளிக்கப்பட்டது. உணவு பொட்டல விபரம் குறிப்பிடாத மசாலா 18.00 கிலோவிலிருநது உணவு மாதிரி சேகரிக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.34000 ஆகும்.மேலும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய எட்டு உணவு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.16,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி பயன்படுத்திய 3 உணவு வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிப்பு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றை மாட்டுவதற்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது எனவும், இறைச்சிகளை வெளியில் தூசு படியும்படி தொங்கவிடப்படக்கூடாது என்றும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுதல் குறித்தும், துருப்பிடிக்காத கத்திகளை பயன்படுத்த வேண்டும் என்றும், கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சுகாதாரமான முறையில் கையாள வேண்டும் என்றும் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்