கோவையில் மின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டம்

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் கோவை ராமநாதபுரம் இபி கான்ட்ராக்ட்டர் சங்கத்தில் நடைபெற்றது இதில் மின் ஒப்பந்ததாரர்களின் சோதனை அறிக்கை பிரச்சனை குறித்தும் மின்சார பணியாளர்களின் வாழ்வாதார பிரச்சனை குறித்தும் தமிழகத்தில் உள்ள அத்தனை ஒப்பந்தர்களுக்கும் மின்சார பணியாளர்களுக்கு முறையாக வேலை கிடைக்காமல் வாழ்க்கை சீரழிவு நோக்கி செல்வது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்தையும் தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியத்தையும் கவனம் ஈர்க்கும் விதமாக 30-6-2023 (அன்று) கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு 11-7-2023 (அன்று)  அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் கோவையில் நடக்கும் இந்த போராட்டம் மின் உரிமம் பெற்ற இரண்டரை லட்சம் மின் உரிமைதாரர்கள் அவர்களை சார்ந்த மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மின் பணியாளர்களின் குடும்பவாழ்வாதார  பிரச்சனையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலே நடத்திட  திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்க கூட்டம் நடைபெற்றது  அனைத்து மாநில,மாவட்ட சங்கங்கள் ,ஒப்பந்ததாரர்கள் , மின் பணியாளர்கள் மற்றும் ஹெல்ப்பர்கள் அனைவரும் பெருந்திரளாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நமது பலத்தை மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் மின் உரிமம் வழங்கு வாரியம், தமிழக அரசு ,மத்திய அரசுகளுக்கு காட்ட வேண்டும்  என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Previous Post Next Post