பிர்லா செல்லுலோஸ் ( ஆதித்யா பிர்லா குழுமம்) ஸ்மித் சிந்தடிக்ஸ், சேலம் மற்றும் எஸ்.ஆர்.டி.இ.பிசி கோயம்புத்தூர் இணைந்து, தெற்கு மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம், கோயம்புத்தூர் துணையோடு ரேடிஸன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சேலை நெசவுகளில் பிர்லா மோடால் மற்றும் பிர்லா எக்ஸல் நூலின் பயன்பாடுகள்" குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு சேலம் அதன் சுற்று வட்டார விசைத்தறி சேலை உற்பத்தி மையங்களான இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், கொண்டலாம்பட்டி, வனவாசி, ஈரோடு, கொமராபாளையம் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவு சேலை உற்பத்தியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்க கூட்டத்தில் முருகன், தலைவர், பிஸினஸ் டெவலப்மெண்ட், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மும்பை, திரு. பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர், தெற்கு மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம், கோயம்புத்தூர், திரு. கருணாநிதி, கவுன்சில் உறுப்பினர், எஸ்.ஆர்.டி.இ.பி.சி கோயம்புத்தூர், கோகுல் பண்டாரி, உரிமையாளர், ஸ்மித் சிந்தடிக்ஸ், சேலம் மற்றும் திருமதி. பிரியங்கா பிரியதர்ஷினி, அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், பிசினஸ் டெவலப்மெண்ட், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மும்பை. ஆகியோர் கலந்து கொண்டு பிர்லா மோடால் மற்றும் பிர்லா எக்ஸல் இழைகள் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்களின் தன்மை, உயர்ந்த தரம் மற்றும் நேர்த்தியான சிறப்பு பண்புகள் குறித்து மிகவும் விளக்கமான உரையாற்றினார்கள்.
மேலும் கருத்தரங்கில் விசைத்தறி சேலை உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிலில் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவ்வப்போது நூல் சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை குறித்த தங்களுடைய சந்தேகங்களை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தெளிவுபடுத்திக் கொண்டனர். சேலை உற்பத்தியாளர்கள் சந்திப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்