சூலூர் காவல்நிலையத்தில் வானதி சீனிவாசன் மீது திமுகவினர் புகார்

கோவை சூலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மாதையனிடம்  சூலூர் பேரூராட்சி துணைத் தலைவர் சோலை.பா.கணேஷ் எட்டாவது வார்டு கவுன்சிலர் பாலாஜி பதினெட்டாவது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் வீராசாமி ஆகியோர்   பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர் இதில்  பிஜேபி கட்சி கூட்டத்தில்  திமுக மக்கள் பிரதிநிதிகளை (சட்டமன்ற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ) மிகவும் கேவலமாக  மற்றும் அருவருக்கத்தக்க முறையில் கண்ணியமற்ற முறையில் பேசியதனை  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார் மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களையும் நாகரிகமற்ற முறையில் பேசியுள்ளார் எனவே பிஜேபி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு சூலூர் காவல்நிலைய ஆய்வாளர் மாதையனிடன் புகார்மனு அளித்துள்ளனர் இதனுடன் அவர் பேசிய சிடி ஆதரரங்களையும் அளித்தனர்
Previous Post Next Post