ஈரோடு கொடுமுடி வட்டம் கருமாண்டம் பாளையம் மேல்மலையம் பாளையத்தில் நல்லம்மாள் (வயது 82) இவர் தனக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகளை காலையில் மேய்ச்சலுக்கு பிடித்து சென்றுள்ளார்.
பின்புமாலை வீட்டிற்கு வரும் வழியில் குட்டை காடு என்ற இடத்தில் காற்று, மற்றும் மழை, பெய்ததால் மின்சார கம்பி கீழே அறுந்து கிடந்துள்ளது.
அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராமல் மிதித்ததால் இரண்டு எருமை மாடுகளும், நல்லம்மாளும் , மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
உடனடியாக மலையம்பாளையம் காவல் நிலைய அதிகாரி SSI மன்சூர் அலி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறார்.