சேலம் மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நோக்கில் அம்மாபேட்டை காமராஜர் சிலை அருகில் உள்ள ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் யாதவமூர்த்தி,நிர்வாகிகள் உதயகுமார், ஒடியன் பாலச்சந்தர், நூல் அருள் உட்பட நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்