சூலூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரூராட்சி தலைவரிடம் மனு

கோவை சூலூர் 18வது வார்டில் உள்ள  குருவம்மாள் நகர், விஜயம் நகர், ஜனனி கார்டன், லஷ்மி  கார்டன் பகுதிகளில் குடிநீர் மிகக் குறைந்த அளவு வருவது குறித்து பாஜக சூலூர் கிழக்கு மண்டல் மகளிர் அணி தலைவர் நந்தினி சுவாமிநாதன்            சார்பாக சூலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம்  புகார் மனு அளிக்கப்பட்டது. மண்டல் தலைவர் ரவிக்குமார், முன்னாள் மண்டல் தலைவர்கள் அசோக் மற்றும்  ரவிச்சந்திரன், முன்னாள் மகளிர் அணி நிர்வாகி சரஸ்வதி, மகளிர் அணி துணைத்தலைவர் சுமதி, 18வது வார்டு மற்றும் 156வது பூத் பாஜக நிர்வாகிகள்  நவநீதக்கண்ணன்,  தனசேகர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மனுவை பெற்று கொண்ட பேரூராட்சி தலைவர்  தேவி மன்னவன் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
Previous Post Next Post