வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி கிராமத்தில் நேற்று 131 ஆண்டு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.திருவிழா முன்னிட்டு முன்னதாக படவேட்டம்மன் பொன்னியம்மன் ஆகியவைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அருகிலிருந்த கோவிலில் இருந்து அலங்காரம் செய்யப்பட்ட சிரசை அம்மனின் திருமேணியில் பொருத்தப்பட்டது. மேலும் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றவுடன் தண்டு மாலைகள் வழிநெடுக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அணிவிக்ப்பட்டது. இதையடுத்து சண்டை மேளம், தாரை தப்பட்டை, இசை வாத்தியங்களுடன் அம்மன் திருவீதி உலா அங்குள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தன திருவிழா முன்னிட்டு புலியாட்டம், சிலம்பாட்டம்,மல்யுத்தம் , கொக்கிலகட்டை ஆட்டம் , அம்மனுக்கு நேர்த்தி கடன்களாக சூரைதேங்காய் உடைத்தல், பொங்கலிடுதல், கூழ் ஊற்றுதல், மா விளக்கு ஏற்றுதல், ஆகியவை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர் என்றும் விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்