காமராஜர் பிறந்த தின விழாவில் 60 வருடங்கள் கழித்து தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடல்....

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் பாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  காமராஜர் 121-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.



 காமராஜர் பிறந்த தின விழா  வாழ்த்துரை தலைமை ஆசிரியர்  நிகழ்த்தினார்.



 இவ்விழாவில்   பாண்டிபாளையம் பள்ளியில்  முன்னாள்  தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமையாசிரியர் கதிர்வேல் ஐயா 60 வருடம் கழித்து  தான் பணியாற்றிய பாண்டி பாளையம்  பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.



 பின்பு கதிர்வேல் ஐயா அவர்   பாண்டிபாளையம்  பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது  நிகழ்ந்த அனுபவங்களை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.


 பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு  நூல்கள்,பரிசு பொருட்களும்,  வ உ சிதம்பரனார் படம், அறுசுவை உணவும்  அளித்தார்.

 முன்னாள் தலைமை ஆசிரியருக்கு   ஈரோடு மொடக்குறிச்சி ஒன்றியம்  வட்டார கல்வி  அலுவலர் திருமதி வனிதா ராணி  பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றியம் வட்டார வள மையம் ஆசிரியர் பயிற்றுனர்  ஸ்ரீதர், ஓய்வு பெற்ற சத்துணவு  அமைப்பாளர் தண்டபாணி க்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.


 






இந்நிகழ்வில் அடிப்படை மக்கள் உரிமைகள் குரல் இயக்குனர் டாக்டர் P. பாலசுப்பிரமணியம், கதிர்வேல், குமாரசாமி, பழனிவேலு, ராமலிங்கம், SK பெரியசாமி, மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.


 


நன்றி உரையை உதவி ஆசிரியர்  நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்..


 தமிழ் அஞ்சல் நிருபர் பூபாலன்

Previous Post Next Post