திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மில்லினியம் பள்ளியில் , 50 உலக சாதனைகளை செய்து அசத்திய மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.
திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மில்லினியம் பள்ளியின் 25 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, 50 உலக சாதனைகளை செய்து அந்த பள்ளி மாணவ- மாணவிகள் அசத்தியுள்ளனர்.
திருப்பூர் ஃபிரண்ட்லைன் கல்விக்குழுமத்தன் சார்பில் 25 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் 50 உலக சாதனைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி ஆகியோர் மேற்பார்வையில் உலக சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடக்க விழாவில் முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த சாதனை நிகழ்ச்சியில் மாணவர் சர்வேஷ் என்பவர் 36 சதுர மீட்டரில், 35 ஆயிரம் விதைப்பந்துகள் மூலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை உருவாக்கி இருந்தார்.
இதே போல, 7 ம் வகுப்பு மாணவி ஹேமாக்ஷா 326 ஓரிகாமி காகித வடிவங்களை 2 மணி நேரத்தில் செய்து காட்டி சாதனை நிகழ்த்தினார். 3 ம் வகுப்பு மாணவி சமுத்ரநதி 10 நிமிடங்களில் 126 யோகாசனங்கள் செய்து சாதனை நிகழ்த்தினார். 7 ம் வகுப்பு மாணவர் விதுர்வைபவ் என்பவர் 14 மணி நேரங்கள் தொடர்ச்சியாக 120 உணவு வகைகளை தயாரித்து சாதனை படைத்தார். 12ம் வகுப்பு மாணவி ரிஷிகா பதானி தொடர்ச்சியாக 14 மணி நேரம் கொரோனா பற்றி விரிவுரை வழங்கி உலக சாதனை நிகழ்த்தினார். 6ம் வகுப்பு மாணவன் சித்தார்த் 70 புத்தகங்களை தொடர்ச்சியாக 7 மணி நேரம் மதிப்பாய்வு செய்து உலக சாதனை நிகழ்த்தினார். 2 ம் வகுப்பு மாணவ்சி சிரோஸ்ரீ நந்தன் தொடர்ச்சியாக 2 மணி நேரங்களில் 60 ஓவியங்களை வரைந்து உலகசாதனையை நிகழ்த்தினார். 8 ம் வகுப்பு மாணவன் யோகேஷ் ஜோவி, 11400 காகித டம்ளர்களை அடுக்கி வைத்து பூமிக்காக மரம் நட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்த்தினார். 1,ம் வகுப்பு மாணவன் அத்வைத் 30 நிமிடங்களில் சிக்கலான புதிர்களுக்கு விடையளித்து உலகசாதனை நிகழ்த்தினார். இந்த உலக சாதனைகளை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கீகரித்து சான்றுகளை வழங்கினார்கள். ஏராளமான மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் ஆர்வமுடன் உலக சாதனை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.