சேலம் கோ ஆப் டெக்ஸ்ட் பின்புறம் உடையார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னபுர சக்தி மாரியம்மன் கோவில் ஆனித் திருவிழா 34 ஆம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.கடந்த 27.06.2023 பூச்சாட்டுகளுடன் நிகழ்ச்சி தொடங்கி 04.07.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் சக்தி கரகம், பூங்கரகம் எடுத்துக்கொண்டு பக்தர்கள் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டு கோவிலை அடைந்தனர் பம்பை வாத்தியங்கள் முழங்க பிரம்மாண்டமாக ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 05.07.2023 அன்று புதன்கிழமை மதியம் 3 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா மாலை 6 மணி அளவில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை சக்தி குரு, ரங்கசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் தேர் வீதி அங்காளம்மன் கோவில் பூசாரி கோபி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.