மின்கட்டண உயர்வை கண்டித்து 280 ஓ. இ., மில்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர், மங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு(ஓ. இ மில்)  சார்பில் மங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் இன்று முதல் முழு உற்பத்தி நிறுத்தம் போராட்டம் துவங்குவது என

மறு சுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் அறிவிப்பு.

கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால் தமிழக முழுவதும் உள்ள 400 ஓ .இ மில்களில்  இன்று முதல் முழுஉற்பத்தி நிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் இதனால் 2  லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு.

நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சில் இருந்து நூலிலே உற்பத்தி செய்யும் ஒ. இ. மில்கள் திருப்பூர், கரூர் ,கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றன இந்த மில்களில் தினமும் 1400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓ. இ மில்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.கிரே நூல்களை பயன்படுத்தி விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது, கலர் நூல்களில் பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.

 மின் கட்டண உயர்வு, மின்சார நிலை கட்டணம் மற்றும் பீக் ஹவர்ஸ் கட்டணம்  மின் கட்டணம் உயர்ந்துள்ளது .ஓ. இ மில் நூல்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை,

இதன் காரணமாக கடும் நெருக்கடி சந்தித்து வருவதால் உற்பத்தியாளர்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில்இன்று முதல் ஈடுபட்டு வருவதாக திருப்பூர் அருகே மங்கலத்தில் நடைபெற்ற மறு சுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 280 ஒ.இ. மில்களும் போராட்டத்துள் இன்று முதல் ஈடுபடுகின்றன.

திங்கள் முதல் மேலும் 290 மில்கள் போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்து உள்ளனர்.

Previous Post Next Post