ஈரோடு மொடக்குறிச்சியில் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதில் 50 லட்சம் மோசடி

 ஈரோடு மாவட்டம்  மொடக்குறிச்சியில்  2000 ரூபாய் நோட்டு  மாற்றுவதில்  20 சதவீதம் கமிஷன் கொடுப்பதாக கூறி 50 லட்சம்  மோசடி நடைபெற்றுள்ளது. 






 இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிராமத்தை சேர்ந்த பூசாரி கருப்பு தேவரின் மகன் சிவாஜி என்பவரிடம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தந்தால்  20 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி  ரூபாய் 35 லட்சத்தை பெற்றுவிட்டு தலைமறைவாகி விட்டார்கள் .




இந்த சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



 அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜவகர் அவர்களின் உத்தரவின் பேரில் ஈரோடு நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V. ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையில் ஈரோடு நகர குற்றப்பிரிவு ஆய்வாளர்  மொடக்குறிச்சி காவல் நிலையம் முருகன் தலைமையில்  சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமை காவலர்கள் ஜெயப்பிரகாஷ், பொன்னுச்சாமி, அன்புராஜ், ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.



 இவ்வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் ராஜேந்திரன் (58) என்பவரையும், நாமக்கல் மாவட்டம் , வேலூர் பொத்தனூர்  மாதேஷ்( 59), ஆகிய இருவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மீதமுள்ள தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்கள்..


தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன் 

Previous Post Next Post