சேலம் நெடுஞ்சாலை நகர் அருகில் உள்ள கிருஷ்ணா தெரு சி பி சி ஐ டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே பகுதியில் 200 அடி தூரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து பாலில் தொழில் செய்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை நகரில் ஒரு தம்பதி வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவதாக புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலையில் சூரமங்கலம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். திவ்யா பாலமுரளி தம்பதியினர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து திவ்யா மற்றும் அவரது கணவர் பால முரளி இடம் விசாரணை செய்தபோது திவ்யா தற்காலிக பணியான திருநங்கைகள் மற்றும் எச்ஐவி பாதிக்கப்பட்ட ஆண்களின் மனைவிகளை கவுன்சிலிங் கொடுக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார்.இவருக்கு ஊதியம் திருநங்கைகளின் வாரியத்தில் இருந்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எய்ட்ஸ் நோயால் தனது கணவர் பாதிக்கப்பட்டு கவுன்சிலிங் வரும் பெண்களிடம் திவ்யா ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடம் மூளை சலவை செய்து சம்பாதிப்பது எப்படி என்று பல்வேறு கோணங்களில் பேசி அவர்களை தன் வலையில் சிக்க வைத்து அவருடைய ஆண் நண்பரான தியாகு என்பவரிடம் அறிமுகப்படுத்தி தனது வாடகைக்கு எடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் செய்தால் 1000 முதல் 3000 ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறி சில ஆண்களை அழைத்து பாலியல் தொழில் ஈடுபட வைத்துள்ளார். திவ்யாவின் கணவர் பாலமுரளி மாநகராட்சி ஊழியர் என்பதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தங்கள் வசிக்கும் வாடகை வீட்டிற்குச் அழைத்து வந்து தனது மனைவி திவ்யா மூலம் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களை இறையாக்கி உள்ளார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சூரமங்கலம் போலீசார் ஜாகீர் அம்மாபாளையம் சேர்ந்த திவ்யா (வயது 36) மற்றும் அவரது கணவர் பாலமுரளி (வயது 50) மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட பூலாவரி ஊராட்சி ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது 30 ) அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் (வயது 45) ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மோகன் குமார் (வயது 25) பொன்னம்மாபேட்டை சேர்ந்த கௌசல்யா (வயது 32 ) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சார்ந்த தேவா (வயது 30) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சேலம் காவல் துனை ஆணையர் லாவண்யா அவர்கள் பரிந்துரை செய்ததால் சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி அவர்களின் உத்தரவின் பெயரில் தியாகராஜனை சேலம் சிறையிலும் திவ்யாவை கோயம்புத்தூர் பெண்கள் சிறையிலும் குண்டாசில் கைது செய்து நகலை கோயம்புத்தூர் சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கபட்டது.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்