ஈரோடு தெற்கு மாவட்டத்தில் SDPI கட்சியின் 15ஆம் ஆண்டு துவக்க தின கொடியேற்று நிகழ்ச்சிகள்....

 SDPI கட்சியின் 15ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


ஈரோடு தெற்கு மாவட்ட தலைமையகத்தில் கட்சியின் கொடியற்று நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள்.சபீர் அகமது வரவேற்புரையாற்றினார். மாவட்ட  செயலாளர் அ.சாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார் 


கட்சியின் கொடியை மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா ஏற்றிவைத்தார்.



நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் M.ஜமால்தீன், மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ.அப்துல் ரகுமான், செயலாளர் தஸ்தகீர், துணைத்தலைவர் முகமது அலி, SDPI கட்சியின் ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான், இணை செயலாளர் ஜெமீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் தளபதி.பசீர் நன்றியுரையாற்றினார்.



இதேபோல ஈரோடு கிழக்கு  தொகுதிக்குடட்பட்ட பெரிய அக்ரஹாரம், ஜானகி அம்மால் லேஅவுட், சுல்தான்பேட்டை, கிருஷ்ணா தியேட்டர், இந்திரா நகர், பழக்கார, தெரு, மரப்பாலம் ஆகிய பகுதிகளிலும், ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட கொல்லம்பாளையம், நாடார் மேடு, சாஸ்திரி நகர், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளிலும், பவானி தொகுதிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம், அந்தியூர் பிரிவு, சீனிவாசபுரம், ஜம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.


பவானி தொகுதி சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் பவானி தொகுதி சமூக ஊடக அணியின் தலைவர் அக்பர் அவர்களின் மகன் அப்துல் ராஜிக் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட துணைத் தலைவர் ஜம்பை ரஃபீக், பவானி தொகுதி தலைவர் முகமது ஜாபிர், துணைத் தலைவர் அய்யூப் அலி, செயற்குழு உறுப்பினர் முஹம்மது அகில், ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் மஸ்தான் உள்ளிட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Previous Post Next Post