கோவை மாவட்டம், மேட்டுப் பாளை யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வெள்ளிக் குப்பம்பாளையத்தில் தற்போது அழிவின் விளிம்பில் உள்ள கும்மியாட்டக் கலையை தேர்வு செய்து அதற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், கிராமப் பகுதி யில், எட்டு வயது சிறுவர் சிறுமியர் முதல் 60 வயது ஆண் பெண் உள் ளிட்ட முதியோர் வரை கும்மியாட்ட கலை குறித்து எடுத்துரைத்து பயிற்சிகள் அளித்தும் கோவில் விசேஷங்கள் சுபமுகூர்த்த தின ங்கள் உள்ளிட்ட காலங்களில் சீருடைகளோடு அந்தந்த பகுதிகளுக்கு குழுவினருடன் சென்று அரங்கேற்றி நிகழ்ச்சி களையும் நடத்தி வருகின்றனர் இது போன்ற கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சிகளில் தெய்வீக பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆகியவற்றை நடத்தி பல தரப்பினர்களின் வரவேற் பை பெற்று வருகின்றனர்.
எந்தவித இசைக் கருவிகளையும் பயன் படுத்தாமல் சலங்கை ஒலி மூலமாக இதுபோன்ற கிராமிய நாட்டுப்புறக் கலை கும்மி பாடல்கள் மூலம் எளிய வகையில் நிகழ்ச்சி நடததுகின்றனர், வருங்கால தலை முறைகள் செல்போன், தொலைக் காட்சி திரைப்படங்கள் போன்றவற் றின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்பிளை விளக்கும் வகையில், இளம் வய தினரை குறித்து தெரிந்து கொண்டு, குழுவின் பயணம் தொடர்கிறது. மேலும் கும்மியாட்டக் கலையை கற்றுக் கொள்வதால் உடல் வலிமை யையும் நோய்,நொடியற்ற வாழும் கிடைக்கும் என்று குறிப்பாக பெண் களுக்கு ஏற்படும் ரத்தசோகை சர்க் கரை வியாதி சுவாசக் கோளாறு ஆகிய பாதிப்புகளும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்றும் கும்மியாட்ட குழுவினர் தெரிவித்தனர். அழிவின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய கலையும், சங்க கால இலக்கியங்களின் நிரந்தர இடம் பிடித்த கும்மியாட்ட கலைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, வெள்ளிக் குப்பம்பாளையம் கிராமிய வள்ளி கும்மியாட்ட குழுவினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர் இந்த கும்மி யாட்டத்தை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் கண்டு களித்தனர்.இந்த கலையை அனை வருக்கும் கற்றுத்தர தயாராக உள்ளதாகவும், இரணிய நாடகக் குழு.வேணுகாணபஜனைகுழு.வள்ளிக்கும்மி குழு.ஆசிரியரான .வ.கோவிந்தராஜ் கூறினார்.
முத்துக்குமார். செய்தியாளர்,