கொடிவேரியில் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள  கொடிவேரி அணைக்கு அருகில் பவானி ஆற்றங்கரையில்

சாய பட்டறை தொழிற்சாலை அமைவதை கண்டித்து   பாசன விவவாயிகள் சங்கங்கள் சார்பில் தலைவர் சுபி தளபதி தலைமையில் கொடிவேரி அணை பிரிவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஈரோடு மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்க கூடிய கொடிவேரி அணையிலிருந்து  வடக்குப் பகுதியில் அரக்கன்கோட்டை மற்றும் தெற்கு பகுதியில் தடப்பள்ளி என இரண்டு கால்வாய்கள் மூலம் 24,504 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன, 

அதுமட்டுமின்றி பவானி ஆற்று நீரானது, கோபி, நம்பியூர், பெருந்துறை, பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்சி பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது,


இந்த நிலையில் இந்த கொடிவேரி அணைக்கு அருகாமையில்  ஏற்கனவே இயங்கி வந்து மூடப்பட்ட தொழிற்சாலை இருந்த இடத்தில் தற்போது தனியார் நிறுவனம் ஒன்று சாய பட்டறை தொழிற்சாலையயை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது,


கொடிவேரி அணைக்கு அருகில் இந்த சாய தொழிற்சாலை அமையும் பட்சத்தில் அருகில் கொடிவேரி அணையும் அதன் மூலம் இருபோக நஞ்சை பாசனம் பெறுகிற தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலும் ஆலையின் இடது புறமாக மாங்கினாங்கோம்பை - நம்பியூர் கூட்டு குடிநீர் திட்டமும், வலது புறமாக பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டமும் காளிங்கராயன் அணைப் பாசனமும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக கூறி கொடிவேரி பிரிவு அணை அருகே தொழிற்சாலை அமைப்பதை தடுத்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொழிற்சாலை அமைவதற்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினியிடம் மனுவை கொடுத்தனர்.

Previous Post Next Post