இந்தியாவில் உருவான யோகா உலக நாடுகளின் பேராதரவோடு 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபையில் இந்திய அரசால் முன்மொழியப்பட்டு தொடங்கப்பட்ட உலக யோகா தினம் 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது யோகா உடல், ஆரோக்கியம், மனஅமைதி, மற்றும் நீண்ட ஆயுளுக்கான தியான பயிற்சி இந்த யோகா பயிற்சி உடலுக்கு மனதிற்கும் ஆரோக்கியம் தரும் இப்பயிற்சி தினத்தை முன்னிட்டு சூலூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொன்விழா கலையரங்கத்தில் நடைபெற்றது இதில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கேயம்பாளையம்.பழனிச்சாமி கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் முன்னாள் மண்டல தலைவர்கள் அசோக் மற்றும் பிவிசிபந்தல்.ரவி மண்டல பொதுச்செயலாளர்கள் அருண்குமார் நந்தகோபால் மண்டல பொருளாளர் மகேஸ்வரன் ஆன்மீகபிரிவு சத்தியநாராயணன் மகளிர் அணி மண்டலத்தலைவர் நந்தினி உள்பட கிழக்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு யோகா செய்தனர்