பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்திற்கு பின் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது கூறியதாவது,
இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஆலோசனைக் கூட்டம் பல்வேறு கட்சி நிர்வாகிகளை சேர்ந்தவர்களுடன் பீகார் மாநில பாட்னாவில் நடைபெற்றது.இந்தக் கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் உருவாக்குதலாக அமைந்துள்ளது.
தேசிய தலைவர்கள் அனைவரையும் சந்தித்தேன் நேற்று பாட்னா சென்றவுடன் லல்லு பிரசாத் யாதவ் அவர்களின் இல்லத்திற்கு சென்று உடல் நலம் குறித்து விசாரித்தேன்.
ஒன்றிய பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்த கூட்டத்தை பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூட்டியிருந்தார் பாஜக என கூறுவதால் இது தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டம் என யாரும் நினைக்க வேண்டாம் இந்தியாவின் ஜனநாயகத்தையும் மக்கள் ஆட்சியையும் மதசார்பின்மையும் பன்முகத் தன்மையும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றப்பட வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என அனைத்து கட்சிகளும் மிகுந்த தெளிவாக இருக்கிறோம்.
இதில் நான் உறுதியாக உள்ளேன் என்பதை இன்று காலை கூட்டத்தில் பேசும்போது எடுத்துரைத்தேன் 2023 இல் கூறினார்கள் 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என கூட்டத்தில் அழுத்தமாக பேசி உள்ளேன்.
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தான் தமிழ்நாட்டில் அமைந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது அகில இந்திய அளவிலும் ஒற்றுமை தான் வலிமை என பேசி உள்ளேன்.
மேலும் எந்த மாநிலத்தில் எந்த கட்சி வலிமையாக உள்ளதோ அந்த கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளன கூட்டணி அமைக்க முடியவில்லை என்றால் தொகுதி பங்கீடு மட்டும் செய்து கொள்ளலாம் அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பது சரியான நிலைப்பாடாக இருக்காது என கூறினேன்.
அரசியல் கட்சிகள் இடையே குறைந்தபட்சம் செயல்திட்டம் இருத்தல் வேண்டும் இது போன்ற ஏழு பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் பேசியுள்ளேன்.
பாஜகாவை வீழ்த்துவதை அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர் பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என நினைத்தோம் அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டுள்ளது ஒற்றுமையை வெற்றிக்கு அடிப்படை நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்தடுத்த நடவடிக்கைகளை பின்ன தெரிவிக்கப்படும் பாட்னாவில் கூடிவிட்டு மகிழ்ச்சியாக அனைவரும் திரும்பி உள்ளோம் இப்போதுதான் கருவாகியுள்ளது அது உருவாக சில மாதங்கள் ஆகும்.
கூட்டத்தில் அனைவருக்கும் நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் கலந்து கொண்டேன் பிறகு மதிய உணவுக்கு பிறகு தான் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்கள் ஆனால் எனக்கு விமானத்திற்கு நேரமாகிவிட்டதால் அனைவரிடம் கூறிவிட்டு சாப்பிடாமல் கூட விமானம் ஏறுவதற்கு வந்துவிட்டேன். எந்த ஒரு உள் நோக்கத்தோடும் செய்தார்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வரவில்லை.
தற்போது தான் முதல் கூட்டத்தை கூட்டி உள்ளோம் அடுத்தடுத்து நடவடிக்கைகளை தெரிவிக்கப்படும் இன்னும் பிரதமர் வேட்பாளரை உறுதி செய்யப்படவில்லை இவ்வாறு கூறினார்