திருப்பூரில் காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு... கருப்புகொடி போராட்டம் அறிவித்த பொதுமக்கள்

திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பாக வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட காயிதே மில்லத் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 130 குடும்பங்களை நீர்நிலை புறம்போக்கு இடத்தில் இருப்பதாகவும் அப்பகுதி வீடு கட்டுவதற்கு ஏற்ற தகுந்ததாக இல்லை என காரணம் காட்டி அவர்களை காலி செய்தது.

 தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இப்பணிகள் தொடங்கியபோது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 45வது வார்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தியதாகவும் அப்போதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் , அப்போதைய மாவட்ட ஆட்சியர் வினித் பொதுமக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளித்து விட்டதாக தமிழக அரசிடம் தவறான கருத்தை கொண்டு சென்று அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணியை மேற்கொண்டு வருவதாகவும் , இப்போதும் அப்பகுதியில் இதற்கான எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் வசித்து வரக்கூடிய இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் ,  மேற்கொண்டு பணிகள் நடக்குமேயானால் வருகின்ற திங்கட்கிழமை 45 வது வார்டு பகுதி முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் , மாநகராட்சி மேயர் , மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டம் நிறைவேற்றப்படாது என தெரிவித்து வரக்கூடிய நிலையில் 45வது வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனை நிறுத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் கூட்டமைப்பு தலைவர் ஹாலிதீன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Previous Post Next Post