கலர் கலரா தண்ணி வருது... சாயக்கழிவு கலந்த நீரை பாட்டிலில் பிடித்து வந்த அதிமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜ்

 ஆழ்குழாய் கிணற்று நீரில் சாயக்கழிவு  நீர்:நிறம் மாறிய தண்ணீர் பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள்அதிமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருப்பூர் மாநகராட்சியின் 16 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி அதிமுக குழு துணை செயலாளருமான தமிழ்ச்செல்வி கனகராஜ் தலைமையில், திருப்பூர் 16 வது வார்டு சொர்ணபுரி கார்டன் பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சாயக்கழிவு கலந்து வரும் தண்ணீரை பாட்டிலில் பிடித்து கொண்டு வந்து மனு அளித்தனர். 


அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 16 வது வார்டு சொர்ணபுரி கார்டன் பகுதியில் 1500 க்கும் மேற்பட்டவர்கல் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது சாயக்கழிவு கலந்து முற்றிலும் மாசுபட்ட தண்ணீர் வருகிறது. இதை பயன்படுத்தும் போது தோல் அரிப்பு, போன்ற உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இதே போல் அவர்கள் அளித்த இன்னொரு மனுவில், திருப்பூர் வடக்கு தாலுகாவில் உள்ள பிச்சம்பாளையம் புதூர் கிராமம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், மாநகராட்சி 17 வார்டுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய வருவாய் கிராமமாக உள்ளது. இதனால் பல்வேறூ சான்றுகள் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தொட்டிபாளையம் கிராமத்தினை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Previous Post Next Post