திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி ஒருவர் பலி.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் வெளியேறியது.
அப்போது பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது பேருந்து அதிவேகமாக மோதியது. இந்தப் பேருந்து விபத்தில் பேருந்து இரு சக்கரங்களும் அந்த நபர் மீது ஏறி இறங்கியதில் திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த பாலு (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட அளவு வேகத்திலே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது ஆனால் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் அனைத்தும் அதிவேகமாகவே இயக்கப்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.