சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவையில் 
சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் புல்லட்.சேகர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர் இந்த மனுவில் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் அந்நிய மதமாற்றம் ஓர் தேசிய
அபாயமாக மாறி வருகின்றது தேசிய அளவில் மதமாற்றம் ஓர் தீவிரவாத செயலாகவும் மதமாற்றத்தின் மூலம் மதமோதல்கள் அதிகரிக்கும் செயலாகவும் மதமாற்றம் மாறியுள்ளது தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் என்பது இருபிரிவினரிடையே சாதி மத மோதல்களை ஊக்குவிக்கும் கருவியாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது மேலும், மதமாற்றம் எனும் பெயரில் இந்து மதத்தினை இழிவு படுத்தும்
விதமாக துண்டு பிரசுரங்களை வினியோகிப்பதும் வாடிக்கையாகி உள்ளது
ஆகவே தமிழகத்தில் விரைவில் கட்டாய மோசடி மதமாற்றத்தினை தடுக்கும் விதமாகவும் துண்டு பிரசுரங்களையும் தடுக்கும்
நடவடிக்கையாகவும், தமிழகத்தில் கட்டாய
மதமாற்ற தடைசட்டம்
இயற்றிடவும், மதமாற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை
எடுத்திட வலியுறுத்தியும் மனு அளித்தனர் உடன் கோவை மாவட்ட தலைவர் எம்.பி பாலா உள்ளிட்ட மாநகர கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Previous Post Next Post