திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பதாகைகள் ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழக அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு,வைப்பு கட்டணம் மூன்று சதவீதம் உயர்வு இதனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.விடியல் ஆட்சியில் திருப்பூர் தொழில் கடும் பாதிப்பு,விடியல் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக தமிழகத்தை இருளில் தள்ளியுள்ளது, உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்,திருப்பூரின் தொழில் தொடர்பாக கண்டு கொள்வதே கிடையாது அவர்களுக்கு சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளனர்,கள்ளச்சாராயம் குடித்து தமிழகத்தில் ஏராளமான வேர் உயிரிழந்துள்ளனர்,
இந்த நிலையில் நேற்று அரசு நீதிமன்றத்தில் 500 கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.தொடர்ந்து இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.