கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் கடந்த 13-12-2022 அன்று ஆலாங்கொம்பு தென் திருப்பதி சாலை மிகவும் பழுதடைந்திருந்ததை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த சாலை மறியலின் போது நமது மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
A.K.செல்வராஜ் BA MLA
அவர்கள் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளரை உடனடியாக தொடர்பு கொண்டு சாலையை செப்பனிட்டுத் தர வலியுறுத்தி கடிதம் அளித்திருந்தார் அதன் பயனாக கடந்த இரு தினங்களாக சாலைப் பணி நிறைவேறும் தருவாயில் ஆலாங்கொம்பு ஜங்ஷன் பகுதியில் சாலை மிகவும் மோசம் அடைந்ததை சுட்டிக் காட்டியது தொடர்பாக இன்று ஆலாங்கொம்பு ஜங்ஷன் சாலையும் உடனடியாக செப்பனிட்டு தரப்பட்டது .
இப்பணி நடக்க உறுதுணையாய் இருந்த
மாண்புமிகு மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர்
A.K.செல்வராஜ் BA MLA
அவர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்
திரு.ராஜா அவர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்
திரு.ரமேஷ் அவர்களுக்கும் ஜடையம்பாளையம் ஊராட்சி ஆலாங்கொம்பு பகுதி வாழ் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்கள்.