சத்தியமங்கலத்தில், நீதிமன்ற வளாகம் கட்ட, தமிழக அரசை வலியுறுத்துவோம். முன்னாள் அமைச்சர். கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத் தில், வெற்றி நர்சிங் கல்லூரி மற் றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் சார்பில்,  இலவச சட்ட பயி ற்சி பட்டறை நடைபெற்றது. இதை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர், கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று இங்கு நடத்தப்படும் சட்ட பயிற்சி முகாம் ஏழை, எளியவர்கள், மலைவாழ் மக்கள், நீதிமன்றத்தில் வழக்காட , சட்டவிதிகளை அறிந்து கொள்ள உறுதுணையாய் அமையும். என்றும், அரசு வளர்ச்சி திட்ட துவக்க விழா நிகழ்ச்சிகளில்.மக்கள் பிரதி நிதிகளை தவிர்த்து, திமுக கட்சி நிர்வாகிகள் விழாக்களை துவக்கி வைப்பதும். பூமி பூஜை நடத்துவதும், தேவையுள்ள பகுதிகளில் திட்டங் களை துவக்காமல்,தேவையற்ற பகுதிகளில் பணிகளை துவக்குவது குறித்து கண்டனம் தெரிவித்து, இதை  தவிர்க்க கோரி, மாவட்ட ஆட்சி யரிடம் புகார் தெரிவித்தோம்.


மேலும், நீதிமன்ற வளாகம் கட்டுவது தொடர்பாக, ஏற்கெனவே சட்டப் பேர வையில் பேசியுள்ளோம். இடம்தேர்வு செய்ய, சட்டமன்ற உறுப்பினர் பண் ணாரி நிலத்தை அடையாளம் காட்டி யுள்ளார். நீதிமன்ற வளாகம் கட்ட ,  ஆயத்தப் பணிகளை விரைவில் துவக்க, சட்டத் துறை அமைச்சர் ரகுபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மலைவாழ் பகுதி மாணவர்கள் நலனுக்காக, விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில், பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண் ணாரி எம்.எல்.ஏ.மற்றும் வெற்றி நர்சிங் இன்ஸ்டிட்யூட் ஆப் பாரா மெடி க்கல் அன்ட் கேட்டரிங் நிறுவன நிர் வாக இயக்குநர் கே.எஸ்.ஸ்ரீதர், மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்க நிறுவனர் டாக்டர்.எல்.சுரேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலை வர் எஸ்.ஆர்.செல்வம்.அதிமுக சத்தி நகரச் செயலாளர்  ஓ.எம்.சும்பிரமணி யம், கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிர பாகரன், மாவட்ட மகளிரணி துணை ச் செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளி ட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற னர். பயிற்சி பட்டறையில் தகவல் உரிமைச்சட்டம், அடிப்படைச் சட்டங் கள், மகளிர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எஸ்.ராமராஜீ, மதன் ராஜ் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக் கத்தை சார்ந்த கண்ணையன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Previous Post Next Post