ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழக அரசின் இ-சேவை மையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
துவக்க விழாவில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, துணைத் தலைவர் மயில்( எ) சுப்பிரமணி, குளுர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ்,பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வி.சி. வேதானந்தம், பாஜக மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ், கவுன்சிலர் செல்வி இளங்கோ, மாநில விவசாய அணி சிறப்பு அழைப்பாளர் பாலகுமார், மதன்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகளும், கண்டிக்காட்டு வலசு ஊராட்சி மன்ற தலைவர் மகாசாமி, பேரூராட்சி கவுன்சிலர் கவின், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.