நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி பஜாா் பொது மயானம் சாலையோரம் சிலர் கோழிகழிவுகளை கொட்டியுள்ளாா்கள் அந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது இதனை உன்ன வனவிலங்குகள் மற்றும் நாய்கள் இந்தப் பகுதியில் உலா வருகிறது இதனால் அதன் வழியாக பள்ளி செல்லும் குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர் சாலையில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளால் பல்வேறு நோய் தொற்று வர வாய்ப்புள்ளது தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர் தலைவர் ரஜினிகாந்த் செயலாளர் ஜோதி பிரகாஷ் பொருளாளர் மல்லிக துணைத் தலைவர் ரவிச்சந்திரன் சந்திரமோகன் மகேந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்