கோவை மாவட்டம், மேட்டு பாளை யம் சிறுமுகை அருகே உள்ள பெள்ளே பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக, அதிக உப்பு கலந்த குடி நீர் வருவதாக பொது மக்கள் ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும், எவ் வித நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்தும், அப்பகுதியில் செயல் படும் டாஸ்மாக் மதுபான கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தியும், சிறுமுகை - அன்னூர் சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இச்சாலையில் போக்கு வர த்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவம் இடம் விரைந்த ஊராட்சி மன்ற தலைவர் சிவக் குமார் மற்றும் சிறுமுகை காவல் ஆய்வாளர் (பொ) நித்யா ஆகி யோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, பொதுமக்கள் சிலர் காவல் ஆய்வாளர் நித்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சூழ் நிலை அறிந்த அரசியல் கட்சி யினர், பொதுமக்களையும், காவல் அதிகாரியையும் சமாதானம் செய்து,ஊராட்சி மன்ற அலுவல கத்தில் அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் உப்பு கலந்த குடிநீரை பாட்டிலில் காண்பித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கள் குடிநீர் சுத்திகரிப்பு செய்த பின்னரே வழங்குவதாக பதிலளித் தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார்பேசும்போது மேட்டுப்பாளையம் அருகே உள்ள பிரபல தனியார் துணி ஆலை நிறு வனம், பவானி ஆற்றில் சுத்திகரி க்கபடாத கழிவுநீரை, வெளியேற்று வதே இதற்கு காரணம் என குற் றம் சாட்டினார். இதுகுறித்து மாவ ட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க லாம் என்றும், இதற்கு தீர்வுகாண குடிநீர் வழங்கும் இடத்தை தூர் வாரி கழிவுகளை அகற்ற வேண் டும் என வட்டார வளர்ச்சி அதிகாரி தெரிவித்தார். அதுவரை அருகில் உள்ள பவானி நீர் குடிநீர் தொட்டி யில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய் வதாக அதிகாரிகள் உறுதியளித் ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.காவல் துறை யினருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்ட தால்அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் நிலவியது.