கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் டி.ஜி.பி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தமிழக காவல் துறை இயக்குனர் சி. சைலேந்தரபாபு ஐபிஎஸ் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தான் கோபி காவல் நிலையத்தில் பணி புரிந்த காலத்தில் தன்னுடன் பணியாற்றிய காவலர்களுடன் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக காவல் நிலையத்தில் சிறப்பாக பணி செய்த எழுத்தருக்கு சிறப்பு பரிசினை வழங்கினார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஆயிரம் மைல் பயணம் ஒரு காலடியில் துவங்குகிறதுஎனவும் . அதை போல நான் இந்த இடத்தில் எனது பணியை துவங்கியது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்,
மனதிற்கு நெருக்கமான இடமாகவும் கோபிசெட்டிபாளையம் திகழ்கிறது என்றும் ,நான் பணி ஓய்வு பெறும் முன்பு அதிகரிகளுக்கு கூறுவது,பணியில் சேரும் போது எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடனும், நியாய உணர்வுடன் நேர்மையான மனதுடன் இருந்த தருணம் போல் 35ஆண்டுகள் கழித்து அதே அளவு நேர்மையுடன் இருந்தோம் ஆனால் அதுவே பெரிய சாதனை என கூறினார். உடன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவஹர், கோபி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், கோபி காவல் ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் நிலைய காவலர்கள் இருந்தனர்.