தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த கோரி திருப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மதுவிற்கு எதிராக மனு கொடுக்கும் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் முயன்ற போது காவல்துறையினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் பரபரப்பு.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிற்கு எதிராக மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட கட்சியினர்கள் நுழைவாயில் முன்பு திரண்டு உள்ளே நுழையும் முயன்றபோது நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினர் இருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது,
போலீசார் அனைவரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என கூறியதால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை எடுத்து காவலர்களின் உடைய அரணையும் மீறி உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சியினரால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு காணப்பட்டது,
முன்னதாக மதுக்கடையின் வாசல், மரணத்தின் வாசல் ,மதுவால் கெட்டுப் போகுது அடுத்த தலைமுறை,இதனை ஒழிக்காமல் ஓயாது மகளிர் பாசறை, என்கிற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு உள்ளே நுழைந்தனர், இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளும் பரபரப்பு காணப்பட்டது அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது