ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டார வேளாண்மை உழவர் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ், வயல் விழா, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், வேளாண்மை உதவி இயக்குனர் வேலுசாமி தலைமையில், கொமார பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் மற்றும் அட்மா திட்ட வட்டார தலைவர் சி.ஆர்.செல்வ ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. வயல் விழாவில்,பவானிசாகர் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர், வாகேஸ்வரன் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக் குனர் சாந்தி,கோபி மைராடா கே.வி. கே.நிலைய விவசாய அலுவலர் சரவணகுமார்,வேளாண்மை அலுவ லர் உமா மகேஷ்,கால்நடை பராமரிப் புத்துறை, மருத்துவர் செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்க ளாக கலந்து கொண்டு, தமிழக அர சின் பல்வேறு துறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் விவசாய நலத் திட்டங்களை, விவசாயிகளுக்கு விள க்கி கூறினர்.
வேளாண் விற்பனை துறை சார்பில், உதவி வேளான்மை அலுவலர் தீபா ஸ்ரீவிவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து, விவ சாயிகளுக்கு எடுத்துரைத்தார். அப் போது கூட்டத்தில் பங்கேற்ற விவ சாயிகள் வேளாண் விளை பொருளு க்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், குறிப்பாக மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கச்செய்ய அரசு முன் வரவேண்டும் என கோரிக்கை வைத் தனர். விழா வில் ஈரோடு வேளாண் மை துறை நடமாடும் மண் பரி சோத னைஆய்வுக்கூடத்தில், விவசாயிகள் நீர் மற்றும் மண் மாதிரிகளை பரி சோதனை செய்தனர். வயல் விழா வையொட்டி விவசாய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை விவசாயிகள் கண்டு களித்தனர். கண்காட்சியில் சத்தி, சதுமுகை அனுப்பர்பாளையத்தைச் சார்ந்த விவசாயி கவிதா மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் இயற்கை உரம், தேன் வளர்ப்பு குறித்து, பார்வை யாளார்களுக்கு செயல் விளக்கம் அளித்தார்.வயல் விழாவில், விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று, விவசாய திட்டங்கள் குறித்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தனர். வயல் விழாவிற்கான ஏற்பாடுகளை, சத்தியமங்கலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வட்டார தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, வீரமணி ஆகியோர் செய்து இருந்தனர்.