மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

வெயில் கொடுமை குறையாததால்  மின் பராமரிப்பு பணிகளை ஒத்திவைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை              மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதனால் மக்கள் மிகுந்த மன வேதனையுடனும் வெளியில் நடமாட முடியாத அளவிலும் உள்ளார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் கஷ்டத்துடன் தான் பள்ளிக்குச் செல்வதை பெற்றோர்கள் கவலையோடு பார்க்கிறார்கள். இந்நிலையில் மாதந்தோறும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செய்யப்பட்டு வருகின்ற பராமரிப்பு பணிகள் மயிலாடுதுறை பகுதியில் நாளை மற்றும் வேறு சில நாட்களில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பதும் அதனால் நாள் முழுவதும் பகல் வேளையில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வெயிலின் தாக்கத்தோடு, மின்சாரத் தடை தாக்கமும் அதிகரித்து சொல்லொண்ணாத துயரத்திற்கு மக்கள் தள்ளப்படுவது உறுதி. ஆகவே இயற்கையான வேதனையோடு செயற்கையாக மின்தடை செய்யப்படுகின்ற சூழலைத் தவிர்த்து,குறைந்தது  பத்து தினங்களுக்கு பிறகு  காவேரியில் தண்ணீர் வந்ததும்  அடுத்த மாதம் முதல் வாரத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை சுற்றுவட்டார மக்களின் நலன் கருதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post