மல்யுத்த வீராங்கனைகளின் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு தழுவிய ஐக்கிய விவசாய முன்னணி போராட்டம் நடத்தி வருகிறது. ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி செயல்பாட்டுக் குழு உறுப்பினர் கி.வே. பொன்னையன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார். சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட வெகுமக்கள் போராட்டமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உணர்ச்சி மிக்க முழக்கங்களை எழுப்பினார்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்யுத்த சங்கத்தின் தலைவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கின் உருவப்படம் போராட்ட களத்தில் கிழித்தெறியப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.