திருச்சி மாவட்டம் பளூரில் நடந்த கோர விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி,சமயபுரம் அருகே உள்ள பளூரில் உள்ள உறவினரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கோவையிலிருந்து குடும்பத்துடன் 7 பேர் காரில் வந்து இருக்கிறார்கள் அந்த கார் பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது முன்னே சென்ற தண்ணீர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்,தனலட்சுமி ஆகிய இருவர் பரிதாபமாக பலியானார்கள்.உடன் வந்த பொற்கொடி, மோனிகா, மனோன்மணி, கிரிஷா மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
கொள்ளிடம் போலீசார் விசாரணை.