டி.என்.பி.எல் 2023 சீஸனில் தங்களின் முதல் தோல்வியைப் பதிவு செய்தது 'திண்டுக்கல் டிராகன்ஸ்'ஸ்ரீ ராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சாய் சுதர்ஷனின் அபாரமான ஆட்டத்தால் லைகா கோவை கிங்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் நான்காவது வெற்றியைப் பதிவு செய்தனர்.முன்னதாக, இந்த சீஸனில் இதுவரை தோல்வியே காணாத திண்டுக்கல் டிராகன்ஸ் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸை எதிர்கொள்ள சேலத்தில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஓப்பனர்கள் எஸ் சுஜய் (32 ரன்கள் 17 பந்துகள்) மற்றும் சரவண குமார் (29 ரன்கள் 17 பந்துகள்) சிறப்பாக விளையாடி திண்டுக்கல் டிராகன்ஸை ஆரம்பத்திலேயே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.அதன்பின்னர், 4வது விக்கெட்டிற்கு அந்த அணியின் சாய் சுதர்ஷன் மற்றும் யூ முகிலேஷ் இணைந்து 85 ரன்கள் சேர்க்க லைகா கோவை கிங்ஸின் ரன் கணக்கு மளமளவென உயர்ந்தது. சாய் சுதர்ஷன் சிறப்பாக பேட்டிங் செய்து இந்த சீஸனில் தனது 4வது அரைசதத்தைப் பதிவு செய்தார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களைக் கடந்த 13வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.லைகா கோவை கிங்ஸின் சார்பில் சாய் சுதர்ஷன் தன் அதிரடி ஆட்டத்தால் 41 பந்துகளில் 83 ரன்கள் குவிக்க அந்த அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சரவண குமார்அதிகபட்சமாக 2 விக்கெட்களை எடுத்தார்.திண்டுக்கல் டிராகன்ஸ் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்க, வெறும் 8 ரன்களில் தங்களின் 3 விக்கெட்களை இழந்து பவர்ப்ளேவிற்குள்ளாகவே அந்த அணி பெரும் சரிவை சந்தித்தது. அவர்களின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வினும் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க திண்டுக்கல் டிராகன்ஸின் வெற்றிக்கான பாதையில் பெரும் தடைக்கற்கள் நிறைந்திருந்தனர். 6வது விக்கெட்டிற்கு ஓப்பனர் ஷிவம் சிங் உடன் இணைந்து இளம் வீரர் சரத் குமார் சிறப்பாக விளையாடி 77 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக சேர்த்தனர். ஷிவம் சிங் அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 61 ரன்கள் விளாசி திண்டுக்கல் டிராகன்ஸிற்கு ஆறுதல் அளித்தார்.
ஷிவம் சிங்கிற்கு துணையாக விளையாடிய சரத் குமார் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 19.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து இந்த சீஸனில் தங்களின் முதல் தோல்வியைப் பதிவு செய்தது. லைகா கோவை கிங்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இந்த சீஸனில் தங்களின் 4வது வெற்றியைப் பதிவு செய்தனர்.ஷிவம் சிங்கிற்கு துணையாக விளையாடிய சரத் குமார் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 19.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து இந்த சீஸனில் தங்களின் முதல் தோல்வியைப் பதிவு செய்தது. மறுபுறம், லைகா கோவை கிங்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இந்த சீஸனில் தங்களின் 4வது வெற்றியைப் பதிவு செய்தனர். மேலும் லைகா கோவை கிங்ஸிற்கு அதிகபட்சமாக கௌதம் தாமரை கண்ணன் 3 விக்கெட்களையும், எம் சித்தார்த் மற்றும் கேப்டன் ஷாரூக் கான் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதில் ஷாரூக் கான் இந்த சீஸனில் ஏத்தர் பர்ப்பிள் கேப் பட்டியலில் முதலிடம் பிடித்து பௌலிங்கில் முன்னேறி வருகிறார்.வெற்றிக்குப்பின் லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாரூக் கான் பேசுகையில், "பலம் வாய்ந்த திண்டுக்கல் டிராகன்ஸிற்கு எதிராக வெற்றிப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களின் உலகத்தரம் வாய்ந்த பௌலர்களை எங்கள் பேட்டர்கள் திறம்பட கையாண்ட விதம் உண்மையில் எங்களின் பலத்தை எடுத்துக்காட்டியது. அதிலும் குறிப்பாக சாய் சுதர்ஷன் தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தி எங்களுக்கு மேலும் ஒரு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார்", என்று ஷாரூக் கான் கூறினார்.தோல்விக்குப்பின் திண்டுக்கல் டிராகன்ஸின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் பேசுகையில், "உண்மையில், லைகா கோவை கிங்ஸின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. மேலும் இந்த விக்கெட் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாகவே இருந்தது. ஆனால் எங்கள் டாப் பேட்டர்கள் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க எங்களால் அவர்களின் கடின இலக்கை சேஸ் செய்ய முடியவில்லை", என்று அஷ்வின் தெரிவித்தார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற லைகா கோவை கிங்ஸின் சாய் சுதர்ஷன் பேசுகையில், இந்த வெற்றி எங்கள் அணிக்கு பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. அதுவும் அஷ்வின் மற்றும் வருண் போன்ற தலைசிறந்த பௌலர்களுக்கு எதிராக ரன்கள் குவித்தது மகிழ்ச்சியளிக்கிறது அதோடு எனது தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி யோசிக்காமல் அணிக்காக விளையாடுவது தான் எனது நோக்கம்" என்று பேசினார்.
சேலம் மாவட்ட செய்தியாளர் - சதீஷ்குமார்