நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவிகள்

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த ஜம்மு- காஷ்மீரை சேர்ந்த மூன்று சகோதரிகள் முதல் மற்றும் கடைசி முயற்சி என்ற நோக்கத்தில் படித்து வெற்றி பெற்றோம்- அர்பிஷ் 11-ம் வகுப்பு படிக்கும்போதே, நீட் தேர்வுக்கு தயாரானோம்- ருதாஃபா பாஷீர் மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காவிடில் மருத்துவ படிப்பில் சேர்வது கடினம். மேலும், நன்றாக பயிற்சி பெற்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் சூழ்நிலை உள்ளதால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களால் மருத்துவம் படிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுவதாக விமர்சனமும் எழுந்து வருகிறது. ஆனால், திறமையான மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனைப் படைக்கிறார்கள். அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரை மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்ஷேரா பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் (உறவினர்கள்) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருக்கிறார்கள்.
 தேர்ச்சி பெற்ற சகோதரிகளில் ஒருவர் துபா பாஷிர் கூறுகையில் ''நாங்கள் மூன்று பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை சிறப்பானதாக உணர்கிறேன்.
Previous Post Next Post