ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் சைலே ந்திர பாபு இ.கா.ப.தலைமையில், நான் முதல்வன் பள்ளி மாணவி களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது இதில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பள்ளி மாணவி களுடன் உரையாற்றிய போது, அவர் பள்ளியில் படித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தனக்கு கற்றுத் தந்த ஆசிரியை, ஆண்டுதோறும் சந்தித்து வந்ததாகவும்,தான் பயின்ற பள்ளி யில், 25 ஆண்டுகளாக ஆண்டு விழாவை தன் சொந்த செலவில் நடத்தி வருகிறேன் என்றும்,40 குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருவ தாகவும் தெரிவித்தார். மேலும் நாடு உனக்கு என்ன செய்தது? என்பதை விட, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்பதே முக்கியம், பள்ளி மாணாக் கள் ஆற்றல் சக்தி, திறன் பயிற்சி வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இந்த உலகம் மிகவும் மோசமானது, இதில் வாழ்வது மிக , கடினம்.அதைப் புரிந்து கொண்டு. மாணவிகள் கல்வி கற்க வேண்டும். மாணாக்கள் நல்ல அறிவியல் கல்வி கணிதம், கணினி ஆகியவற்றில் கவனம் செலுத்தி தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் உலகப்போரில், ஜப்பான் நாடு தரை மட்டமானது.ஆனால் அந்த நாட்டு மக்கள் தன் முயற்சியால், அறி வியல் வளர்ச்சியால் தற்போது இயந் திரத் துறையில் சிறந்து விளங்கு கின்றனர் இதற்கு காரணம் அவர்கள் அறிவியல் திறன் தான். இதனால் மாணாக்கள் அறிவியல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் வாழ்வில் ஜெயித்து காட்டுவேன் என்கிற மன உறுதி வேண்டும். தமிழ் சினிமாக்களில்,அஜித், விஜய், சூர்யா என நடிகர்கள் அழகாக உள் ளார்கள் என நாம் அவர்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றோம். அது தவறு நாம் அழகாக உள்ளோம் என, நம் மீது நாம் ஆர்வம் காட்ட வேண் டும்.அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜெனாஸ் ஜாக் என்பவர், போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்து ஊனம் இல்லா குழந்தைகளை உருவாக்கினார். அந்த மருந்தை அவர் விற்பனை செய்தால் பல்லா யிரம் கோடி பணம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் தன்னால் கண்டு பிடிக்கப்பட்ட மருந்து, இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு இலவச மாக வழங்க வேண்டும் என எண்ணி, விற்பனை செய்ய மறுத்து, ஊனம் இல்லா குழந்தைகள் வளர காரண மானார். இவர் போன்று மாணவர்கள் வித்தியாச மான கண்டுபிடிப்பை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தான் படிக்கும் காலத்தில், பள்ளி ஆசிரியர்களிடம் அடி வாங்கி படித்து, இந்த உயர்ந்த பதவிக்கு வந்து உள்ளேன். ஆனால் இப்போது பள்ளி மாணவர்களை எந்த ஆசிரியர்களும் அடிப்பதில்லை பள்ளி மாணவர் களை அடிக்கக் கூடாது. அவர்களை அன்பால் திருத்த வேண்டும் என் றார்.அதைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் ஜவகர் , காவல்துறை அதிகாரிகள், மாவட்ட கல்வி அலு வலர் தேவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் சஷீலா ராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர். .முன்னதாக பள்ளி உதவி தலைமையாசிரியர் வின் சென்ட் அந்தோணி ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக ஆசிரியர் பொன்னுசாமி நன்றி கூறினார்.