அனுக்ரஹா மந்திர் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

உலக யோகா தினம் அனுக்ரஹா மந்திர் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் யோகா பல்வேறு நிலைகளில் செய்து காண்பித்து யோகாவின் முக்கியத்துவத்தை இன்றைய கால நிலையில் மன அழுத்தத்தை குறைக்கின்ற வகையிலும் உடல் ஆரோக்கியத்தை பேணுகின்ற வகையிலும் சிறப்பாக செய்து காட்டி உலக யோகா தினத்தை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஷோபா தலைமை வகித்தார். பள்ளிமுதல்வர் த.சீனிவாசன் முன்னிலையில் மைக்கேல் ஜாப் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வசந்த்ராஜ் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர் பள்ளியின் துணை முதல்வர் திருமதி. சரண்யா நன்றியுரை கூறினார்.
Previous Post Next Post